.

Iyley Iyley Lyrics

ஐளே ஐளே..(4)
ஐளே ஐளே
என் கால்கள் பறக்குதே மேலே
ஐளே ஐளே
வெண் மேக கூட்டங்கள் கீழே
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
கொதிக்குது காய்ச்சல் போலே
அனல் இருக்கு குளிர் இருக்கு
எல்லாமே உன்னாலே ...
ஒரு முத்தம் தந்து செல்கிறாய்
தண்டவாளத்தை போல
மறு முத்தம் ஜோடி கேட்குதே
மீண்டும் தீண்டடி மேலே
இதழ் மொத்தம் ஈரமானது
பாரமானதை போல
ஏதோ ஒரு மோகம்
இது ஏகாந்த காந்தம்

ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே மேலே
ஐளே ஐளே
வெண் மேக கூட்டங்கள் கீழே

அந்நாளில் ஆப்பிள் தின்றதடி
ஏவால் முத்தம்
பின்னாலே ஆட்கள் வம்சத்திலே
அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்டும் நிற்காமல்
முத்த சத்தம்
முத்தங்கள் மோதி கொண்டால் தான்
உலகம் சுத்தும்
நம் ஆதியின் அந்தமும்
முத்தமே முத்தமே
முத்தம் தா முத்தம் தா
கண்மணி ஒஹ்ஹ ...
யாரையும் வீரனை
முத்தமே மாற்றுமே
முத்தால் தேகம்
அது மின்சார பாகம்
ஐளே ஐளே
என் கால்கள் பறக்குதே மேலே
ஐளே ஐளே
வெண் மேக கூட்டங்கள் கீழே

அன்பெனும் வேதம் சொல்லுமடி
அன்னை முத்தம்
அறிவெனும் பாடம் சொல்லுமடி
தந்தை முத்தம்
ஆகாயம் தாண்ட சொல்லுதடி
காதல் முத்தம்
அதனால் தான் எங்கும் கேட்குதடி
வெற்றி சத்தம்
என் வாழ்க்கையே மாற்றுதே
முத்தமே முத்தமே
முத்தம் தா முத்தம் தா
கண்மணி ஒஹ்ஹ ...
காலமும் நேரமும்
முத்தால் மாறுதே
முத்தால் தேகம்
அது மின்சார பாகம்
ஐளே ஐளே
என் கால்கள் பறக்குதே மேலே
ஐளே ஐளே
வெண் மேக கூட்டங்கள் கீழே
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
கொதிக்குது காய்ச்சல் போலே
அனல் இருக்கு குளிர் இருக்கு
எல்லாமே உன்னாலே ...
ஒரு முத்தம் தந்து செல்கிறாய்
தண்டவாளத்தை போல
மறு முத்தம் ஜோடி கேட்குதே
மீண்டும் தீண்டடி மேலே
இதழ் மொத்தம் ஈரமானது
பாரமானதை போல
ஏதோ ஒரு மோகம்
இது ஏகாந்த காந்தம்

ஐளே ஐளே
என் கால்கள் பறக்குதே மேலே
ஐளே ஐளே
வெண் மேக கூட்டங்கள் கீழே

ஐளே ஐளே...(2)
Report lyrics