.

Thoovaanam Lyrics

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவளே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்க்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்
புலிக்களும் புனிதம்
கால் வைத்து நீ செல்லும் சாலாயில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த ஏமாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோவம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்
கனவுகள் கதை போதும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்
நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொள்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
ஓருயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவளே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்
Report lyrics
Top Vishal Dadlani & Sunitha Sarathy Lyrics