.

Kadhal Kanave Lyrics

காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே (ஆ)
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே

காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்
அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே..

காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே (பெ)

செதராம சிறு மொழிப் பேசி (ஆ)
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாளே பரவசம் ஆனேன் சொகமா
சிறு நூலா துணியில் இருந்து (பெ)
தனியாக விலகி விழுந்து
மனமிங்கே இளகி போச்சு மெதுவா
இறகாலப் படக நீந்தி காத்தில் நானும் மெதந்தேனே (ஆ)
கடிவாளக் குதிரையாக எனைதான் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே

பருவத்தில் பதியம் செஞ்சேன் (பெ)
பதுங்காம மெதுவா மிஞ்ச
புதுவேகம் எடுத்தே நடந்தேன் தனியே
உருவத்த நிழலா புடிச்சேன் (ஆ)
உறவாக கனவுல படிச்சேன்
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே
இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே (பெ)
கண்ணாடி தொட்டி மீனா நாளும் உன்ன பாத்தேனே
மாறாதே மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே (ஆ)
காதல் கனவே... (ஆ)
ஆச மறச்சு..........

காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே

கனியே உன்ன காணக் காத்திருக்கேன் (பெ)
அடியே வழி நானும் பாத்திருக்கேன் (ஆ)
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
Report lyrics
Top Pradeep Kumar & Kalyani Nair Lyrics