.

Nadigar Thilagam Lyrics

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத

நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல

அவள எண்ணி மனசுக் குள்ள ஆனெ கோளாறு
அவ நடிப்பா பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்கரு
இன்னும் மூணு ஆஸ்கரு

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத

ஹே வாசம் மனம் பாத்து என்ன
பாலும் பழம் பாத்து என்ன
பாவி புள்ள நடைய பாத்து பசி மறந்தேனே

பந்த பாசம் பாத்து என்ன
பரா சக்தி பாத்து என்ன
கன்னி புள்ள கொரல் கேட்டு கதை அளந்தேனே
அவ கண்ணால தானே நானும் படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னாடி அன்பு தேடி திரி சூலம் ஆகி போனேன்

அவளோட திரு விளையாடல் தேவர் மகன் ஆனேன்
தேவர் மகன் ஆனேன் இப்போ தேவ மகன் ஆனேன்

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத

மாடி வீடு ஏழை போல மனோஹரா சோகம் போல
அன்பு வெச்ச மனசில் இப்போ தொலஞ்சது சாமி
கட்ட பொம்மன் வீரம் போல கை கொடுத்த தெய்வம் போல
விட்டு புட்டு அவளும் செல்ல வெளங்கல நீதி

அவ இல்லாது போன வாழ்வில் விதி வெள்ளி கூட தெப்பம்
அவ பொல்லாத பேச்சு கேட்டு இறவாச்சே நீல வானம்

அவள நானு இங்க கூண்டு கிளி ஆனேன்
கூண்டு கிளி ஆனேன் இப்போ யான ஒல்லியானா

நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத

போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல

அவள எண்ணி மனசுக் குள்ள ஆனே கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு
Report lyrics
Top Krishnamoorthy Lyrics