.

Pesuraen Pesuraen Lyrics

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி(2)

யாரிந்த கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன் நோவுத
எடுத்து போக துடிக்கிது மனம்
எனக்கு எனக்குனு
போடா போடா தூக்கிட்டு
உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி ஒன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது

ஐயோ
உன்ன மேல கட்டி தூக்கிவிட்டாங்களே

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி
ஆ....

கதிரடிச்ச களமானேன்
கல்லெரிஞ்ச குலம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதா
எனக்கு ஏதோஆயாச்சு
எதக்கண்டாலும் நீயாச்சு
காதல்தான் வேர் விட்டதா
தாவணியா மாறிடனும்
தோளு மேல ஏறிடனும்
இடையும் சடையும் நடையும் கோடி பெறும்
என் இதயம் நிழலாய் பின்னால் ஓடி வரும்
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

குறுக்க நெடுக்க நட போட்டு
குலுங்க குலுங்க இசை பாட்டு
பாடாதோ உன் கொலுசு
வடம்பிடிச்ச தேர் போல
வரப்போடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு
பஞ்சாங்கத்த பாக்குற நான்
அய்யர்கிட்ட கேட்கிறனே
மயிலே உன நான் மணக்குற தேதியத்தான்
நான் முதல்நாள் இரவில் சொல்வேன்
மீதியத்தான்
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி
யாரிந்த கிராமத்து தேவத
நான் என்ன சொல்லுவேன் நோவுத
எடுத்து போக துடிக்கிது மனம்
எனக்கு எனக்குனு

போடா போடா தூக்கிட்டு
உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி ஒன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது
Report lyrics
Top Justin Prabhakaran Lyrics