.

Kanna Kaattu Podhum (Karaoke) Lyrics

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வருவேன்
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகல சம்பந்தம் போடல
அப்பவுமே ஒறவு நீ நீ
அன்புல வெத வெதச்சு என்ன நீ பறிச்சாயே...
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வருவேன்
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகல சம்பந்தம் போடல
அப்பவுமே ஒறவு நீ நீ
அன்புல வெத வெதச்சு என்ன நீ பறிச்சாயே...

இசை சரணம் - 1

நெஞ்சுல பூ மழைய சிந்துற உன் நெனப்பு
என்ன தூக்குதே
எப்பவும் யோசனைய முட்டுற ஓன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச நான் வாயடச்சு போகிறேன்
வெட்டவெளி பாத நானும் உன் வீடு வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்சே
சக்கர வெயிலடிச்சு சட்டுன்னு ஓச்சே
ரெக்கையும் மொளச்சிடுச்சு கேட்டுக்கோ கிளி பேச்ச
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வருவேன்
ஹோ என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்
இசை சரணம் - 2

ஓ தொட்டதும் கைகளுல ஒட்டுற ஓன் கருப்பு
என்ன மாத்துதே
ஒட்டட போல என்ன தட்டிடும் ஓன் அழகு
வித்த காட்டுதே
தொல்லைகள் கூட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல
ஒன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து
சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து... ( இசை )

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வருவேன்
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்
Report lyrics